'சசிகலா விவகாரத்தை மட்டும் ஊதி பெரிதுபடுத்திவிட்டன ஊடகங்கள்'

பெங்களூரு: பெங்களூரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத் துச் சலுகைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக கர்நாடகச் சிறைத் துறையின் கூடுதல் டிஜிபி அதி காரியான என்.எஸ்.மேக்ரிக் தெரி வித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா, சிறைத் துறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத் துள்ளார். இதனால் சசிகலாவுக்குச் சிறப்பு சமையலறை, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப் புச் சலுகைகள் வழங்கப்பட்டதை அப்போதைய டிஐஜி ரூபா டி.மவுட் கில் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து டிஜிபி சத்தியநாராய ண ராவ், டிஐஜி ரூபா டி. மவுட்கில், தலைமைக் கண் காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா ராய் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இந்நிலையில் சிறைத்துறைக்குப் புதிய கூடுதல் டிஜிபி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள என்.எஸ். மேக்ரிக், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். சிறையில் கைதிக்கான சீருடை அணியாமல் சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற காணொளி வெளியாகியுள் ளது பற்றி கேட்டதற்கு, "நான் பொறுப்பேற்ற பிறகு இருமுறை பெங்களூரு மத்திய சிறைக்குச் சென்று ஆய்வு செய்தேன். அப் போது அனைத்துக் கைதிகளும் கட்டாயம் சீருடை அணிய வேண் டும் என உத்தரவிட்டு இருக்கி றேன். எனவே சசிகலா இப்போது சிறையின் சீருடையைத்தான் அணிகிறார்," என்றார். நீங்கள் சசிகலாவின் அறையில் சோதனை நடத்தி ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற கேள்விக்கு, "எனக்கு முன் பாக இருந்த அதிகாரிகள் சோதனை செய்து, சில பொருட்க ளைக் கைப்பற்றியதாகத் தெரிகி றது.

சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டதாக முன்னாள் சிறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் பற்றிய கேள்விக்கு, "அது பற்றி நான் எதுவும் பேச விரும்ப வில்லை. நான் பொறுப்பேற்றது முதல் அவருக்கு எவ்வித சலுகை களும் வழங்கப்படவில்லை. சசி கலா சாதாரணக் கைதிகளைப் போலவே நடத்தப்படுகிறார்," என் றார். முந்தைய சிறை அதிகாரிகள் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகை வழங்கியதாக அவர் கர்நாடக சட்டப்பேரவையின் பொதுக் கணக் குக் குழுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பற்றிக் கேட்ட தற்கு, "அது ஒட்டுமொத்த சிறை முறைகேடு தொடர்பான எனது அறிக்கை. குறிப்பாக சசிகலா வுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக எனக்குக் கிடைத்த தகவல்களை உறுதி செய்து தாக்கல் செய்தேன். ஆனால் ஊடகங்கள் சசிகலா விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திவிட்டன," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!