இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை

சீனாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள படைகளை உடனடி யாகத் திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவை சீனா வலியுறுத்தி இருக்கிறது. எந்த விலையையும் கொடுத்து தங்களது இறையாண்மையைக் காப்போம் என்றும் சீனா தெரிவித் துள்ளது. “சர்ச்சைக்குரிய பகுதியில் சீன எல்லைப் படைகள் எதிர்ப்பு நட வடிக்கைகளைத் தொடங்கிவிட் டன. அங்கு படைகள் குவிக்கப் பட்டு, பயிற்சியும் அதிகரிக்கப் படும்,” என்று சீனத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் வு சியான் சொன்னதாக சின்ஹுவா செய்தி கூறுகிறது. டோக்லம் வட்டாரத்தில் சீனா சாலை அமைப்பதைத் தடுக்கும் விதமாக, சீன-இந்திய எல்லை யைத தாண்டி சீனாவுக்குச் சொந்த மான பகுதிக்குள் இந்தியத் துருப்புகள் கடந்த மாதம் நுழைந் ததாக சீனா கூறி வருகிறது.

சீனா, இந்தியா, பூட்டான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லை களும் டோக்லமில் சந்திக்கின்றன. அது அம்மூன்று நாடுகளுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. டோக்லம் தனக்குச் சொந்த மானது என்று சீனாவும் ‘இல்லை இல்லை, அது பூட்டானுக்கு உரியது’ என்று இந்தியாவும் பூட்டானும் கூறி வருகின்றன. பூட்டானின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா கடந்த மாதம் டோக்லமில் சீன ராணுவம் சாலை அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உரசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா தனது படைகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அது பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும் என்றும் சீன அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.