தங்கம் கடத்தியதாக எஸ்ஐஏ ஊழியர் புதுடெல்லியில் கைது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் எஸ்கியூ-402 விமானத்தில் இம்மாதம் 22ஆம் தேதி பணியில் இருந்த மூத்த ஊழியர் ஒருவர், புதுடெல்லி இந் திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைதானார். தங்கம் கடத்தியதாகக் கூறப் பட்டதன் பேரில் புதுடெல்லி சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து வந்த அந்த ஊழியரைச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து 1,048 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக புது டெல்லி விமானநிலையத்தின் சுங்கத்துறை கூட்டு ஆணையர் அனுபா சிங் கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது பற்றி கேட்டபோது, தனது ஊழியர் ஒருவர் திங்கட்கிழமை புதுடெல்லி விமானநிலையத்தில் கைதானதை எஸ்ஐஏ நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இருந்தாலும் அது மேல் விவரங் களைத் தெரிவிக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் $65,000. அந்தத் தங்கத்தை புதுடெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒருவரிடம் அந்த ஊழியர் ஒப்படைக்கவிருந்த தாக முதல்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்தது. இப்படிச் செய்வதன் மூலம் அவருக்கு S$500 கிடைக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். கைதாதி இருக்கும் ஊழியர் சிங்கப்பூரர். அவர் ஜனவரி 8ஆம் தேதி இதே போன்ற குற்றச்செய லைச் செய்திருக்கிறார் என்றும் ஆனால் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை என்றும் நம்பப் படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!