கமல்ஹாசன்: அரசியலில் இருந்து பின்வாங்கப்போவதில்லை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் அர சியலிலிருந்து பின்வாங்கப்போவ தில்லை என்று உறுதிபடத் தெரி வித்து இருக்கிறார். தனது வாழ்க்கையைத் தான் வாழ்ந்து முடித்துவிட்டதாகவும் இனிமேல் தன்னுடைய வாழ்க்கை மக்களுக்காகவே இருக்கும் என்றும் தொலைக்காட்சி ஒன் றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். "மக்களுக்கு எதிராக செயல் படும் எல்லாக் கட்சியையும் நான் எதிர்ப்பேன். மக்களுக்கு எதிராக என் கட்சியே செயல்பட்டாலும் அதையும் நான் எதிர்ப்பேன்," என்று கமல்ஹாசன் கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டு காலமாகவே சரியில்லாத ஆட்சிகள் நடந்து வந்துள்ளதாக வும் அடுத்த தேர்தலில் தன் கட்சித் தலைமையில் சிறந்த ஆட்சி அமைய தான் பாடுபடப் போவதாகவும் பேட்டியில் அவர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் வேறு கட்சி களுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை நிராகரிப்பதற்கு இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் அவர். என்றாலும் ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளுடன் சேரமாட் டோம் என்றார் அவர்.

"மக்களுக்குச் சேவை செய்த படியே என் உயிர்போக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல. ஆனால் தீவிரவாதப் போக்கு எனக்குப் பிடிக்காது. "நாட்டில் இந்துத் தீவிரவாதமும் இருக்கிறது. தமிழ் செய்தித்தாட் களைப் படியுங்கள்," என்று பேட்டி யில் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக நிதி வரக்கூடும் என்று சந்தேகம் கிளம்பி இருப்ப தாகவும் இது பற்றி போலிசார் புலன்விசாரணை நடத்தவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி கோருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!