அதிமுக சொத்து ரூ. 225 கோடி; 5 ஆண்டுகளில் 155% அதிகம்

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் சொத்து நிலவரம் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் அதிமுக, உத் திரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி, ஃபார்வர்ட் பிளாக், சிவசேனா ஆகிய முக்கியமான மாநிலக் கட்சிகளின் சொத்து மட்டுமே அதிகரித்திருப்பது அந்த அறிக்கை மூலம் தெரியவருகிறது. அதிமுகவின் மொத்த சொத்து 2011=12 முதல் 2015=16 வரைப் பட்ட காலகட்டத்தில் 155% அதா வது ரூ. 88 கோடி அதிகரித்து ரூ. 225 கோடியாக ஆகியிருக் கிறது.

சமாஜ்வாடி கட்சியின் சொத்து 198% கூடி ஐந்தாண்டு களில் ரூ. 635 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சியே ஆகப் பணக்கார கட்சி என்பது ஆய்வில் தெரியவந்து இருக்கிறது. இந்தியாவில் தேர்தல் ஆணை யத்தில் பதிந்துள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களுடைய சொத்துக் கணக்கு, வரவுசெலவு கணக்குகள் முதலானவற்றை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் ஆண்டு தோறும் ஒப்படைக்கவேண்டும். சிவசேனாவின் சொத்து மதிப்பு 92% கூடி ரூ. 39 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!