ராகுல் காந்தி சென்ற தனி விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக காங் கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லி யிலிருந்து சென்ற தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரண மாக ஹூப்ளியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பத்துப் பேர் அமரும் வசதி கொண்ட அந்த டசால்ட் ஃபால்கன் விமானம் காலை 9.20 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பியது. விமானம் 41,000 அடி உயரத்தில் பறந்தபோது திடீரென 'தானியக்க விமானி' முறை செயலிழந்ததாகக் கூறப்பட்டது. ஆயினும் ஒருவழியாக காலை 11.25 மணிக்கு விமானிகள் அதைப் பாதுகாப்பாகத் தரை இறக் கியதாகத் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தியைத் தொடர்புகொண்டு சம்பவம் பற்றி விசாரித்ததாக காங்கிரஸ் வட்டா ரங்கள் கூறின.

மாலை வரை இந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட சிலர் மட்டுமே அதை அறிந்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாற்றுக்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம் எனக் கூறி, ராகுலின் நெருங்கிய நண் பரும் விமானத்தில் உடன் சென்ற வருமான கௌஷல் வித்யார்த்தி போலிசில் புகார் அளித்தார். அதில், "வானிலை நன்றாக இருந்தபோதும் விமானம் திடீரென ஒரு பக்கம் சாய்ந்தும் தாழ்வாக வும் பறந்தது வழக்கத்திற்கு மாறாக இருந்தது," என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்டதும் அதில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமானிகள் ராகுலிடம் சொன்ன தாகவும் அதைக் கேட்டதும் விமா னத்தைச் சாமர்த்தியமாகத் தரை இறக்கிய விமானிகளுக்கு அவர் நன்றி கூறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், 'ஆட்டோபைலட்' முறையில் இருந்து மனித இயக்கு முறைக்கு மாற்றும்போது கோளாறு ஏற்பட்டதாகவும் இது வழக்கத்திற்கு மாறானது இல்லை என்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!