ஒருபக்க மீசை, மொட்டை: சவால்விடும் திமுக, அதிமுக

கடலூர்: திமுக தலைவர் கருணா நிதிக்கும் அவரது குடும்பத்திற்கும் காவிரி நீர் தமிழகத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் துளி யும் இல்லை என்று சட்ட அமைச் சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார். காவிரி மேலாண்மை வாரி யத்தை மத்திய அரசு உடனடி யாக அமைக்க வலியுறுத்தி கட லூரில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசிய அவர், காவிரி விவகாரத்தை முன்வைத்து அர சியல் செய்வதே கருணாநிதி குடும்பத்தாரின் நோக்கம் என்று சொன்னார்.

2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோது கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசில் பங்கு வகித்த திமுக ஒருமுறையாவது அவர்களை எதிர்த்துப் பேசியது உண்டா? எனக் கேள்வி எழுப்பி னார். தமிழக மக்கள் ஸ்டாலினை நம்பத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட அவர், திமுக தலை வரே தமது மகனை நம்பத் தயாராக இல்லாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள் என் றும் கேட்டார். "தமிழக மக்கள் எப்படிப் போனால் என்ன?

காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன, வரா விட்டால் என்ன? அவர்கள் எண் ணம் எல்லாம் காசு, பணம், துட்டு மட்டும்தான். "காவிரி நடுவர் மன்றம் அமைக்க திமுக எடுத்த நடவ டிக்கை என்ன? அதை தெரிவித் தால் நாங்கள் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறோம். துரோ கத்திற்கு மறுபெயர் திமுக. காவிரி விவகாரத்தில் திமுக இழைத்த துரோகம் முறியடிக்கப் பட்டு, காவிரி நீர் தமிழகத்திற்கு வந்தே தீரும்," என்று முழங்கினார் அமைச்சர் சண்முகம். உலகமே தலைகீழாக மாறி னாலும் ஸ்டாலினால் முதல் வராக முடியாது என்று சொன்ன அவர், காவிரி விவகாரத்தில் திமுக நாடகமாடி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

"காவிரி பிரச்சினையில் நிந்தர தீர்வை ஏற்படுத்தி தந்தது அம்மா தலைமையிலான அதிமுகதான். திமுக என்ன செய்தது?," என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, திமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அக் கட்சியின் அமைப்புச் செயலர் டிகேஎஸ் இளங்கோவன், "காவிரி விவகாரத்தில் திமுக எடுத்த நட வடிக்கைகளைக் கூறினால், அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு பக்க மீசையை மட்டுமல்லாமல் மொட்டையும் அடிக்க வேண்டிய நிலை ஏற்படும்," என்றார். காவிரி விவகாரத்தில் அதிமுக நிறைய துரோகங்களை இழைத்து இருப்பதாக அவர் மேலும் தெரி வித்தார்.2

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!