கோவை: அண்மையில் கோவையில் கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் இது வரை ரூ.5 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. கோவையில் கடந்த இரு மாதங்களாகத் தங்கியிருந்து கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த ஆனந்தன் சில தினங்களுக்கு முன் கைதானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்ததை ஒப்புக்கொண்டார். பெரிய சந்தைகள், சுற்றுலாத் தலங்களைக் குறி வைத்து, அங்கு நேரடியாகச் சென்று இவர்கள் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதுவரை ரூ.5 கோடி கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுள்ளதாக ஆனந்தன் ஒப்புக்கொண்டுள்ளார்.