பருவமழைக்கு கர்நாடகாவில் பெண் உட்பட எழுவர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து கொட் டிய தென்மேற்குப் பருவமழைக்கு ஒரு பெண் உள்பட எழுவர் உயி ரிழந்தனர். தும்கூரு மாவட்டம், மதுகிரி, குப்பி, கொரட்டகரே பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக பெய்த கனமழையினால் பல இடங் களிலும் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. கதக் மாவட்டம், தம்பாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மல்ல வாஜடால் என்ற பெண் பலியானார்.

இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் கதக் மாவட்டம் முழு வதும் எங்கு பார்த்தாலும் வெள் ளக்காடாக மாறியுள்ளது. அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடி யாமல் வீட்டிலேயே முடங்கி கிடக் கும் நிலை உருவாகி உள்ளது.

மும்பை, கோவா, கேரளா, கர்நாடகாவில் இந்த வாரத்தில் கனமழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையின் மலபார் வட்டாரத்தில் சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் தத்தளித்தன. படம்: இந்திய ஊடகம்

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!