சிம்லா: பல மலைப் பிரதேசங்களை யும் மெட்ரோ நகரங்களையும் சார்ந்த மக்கள் சிம்லாவைப் போன்றே தண்ணீர் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள னர்.
பெங்களூரு, டெல்லி நகர மக் கள் நிலத்தடி நீரை நம்பி உள்ள னர். ஆனால் அளவுக்கதிக மான மக்கள் தொகையால் யமுனா நதி போன்ற இயற்கை வளங்களும் மாசுபட்டுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுற்றுப்புற தண்ணீர் திட்ட நிர்வாகி சுஷ்மிதா சென்குப்தா கூறியுள்ளார். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராகும். இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் சிம்லா இப்போது முக்கியப் பிரச் சினையில் சிக்கியிருக்கிறது.
சிம்லாவில் உள்ள பாக்லியில் தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை நிரப்பும் மக்கள். படம்: ஊடகம்