ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழகச் சட்டமன் றத்தில் பேச அனுமதி மறுக்கப் பட்டதால் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பி னர்கள் நேற்று வெளிநடப்பு செய் தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த மாதம் 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
தூய்மையான காற்று, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண் டித்து உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து இந்திய மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தமது கோரிக்கையை முன்வைக்க முயன்றார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டதால் திமுக தனது அதிருப்தியைத் தெரிவிக்க வெளி நடப்பு செய்தது.