சென்னை: அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியின ரின் நெருக்கடி உள்ளிட்ட கார ணங்களால் சிறுதொழில் நிறுவ னங்களின் முதலீடுகள் தமிழ கத்தை விட்டு வெளியேறியுள்ள தாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், தமிழக ஆட்சியா ளர்களின் ஊழல் காரணமாக ஓராண்டில் 50,000 சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
"கடந்த சில ஆண்டுகளாக மட்டும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஏராளமான பெருநிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் வெளியேறியதால், அவற்றை நம்பி அவற்றுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்து வந்த சிறு நிறுவனங்கள் வெளியே றியதுதான் இப்பின்னடைவுக்கு காரணமாகும்.