சென்னை: நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், பெற்றோர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறி போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசானது, தமிழக மக்களின் உணர்வுகளை நிராக ரித்து, மாநில உரிமையை பறித்து, சட்டப்பேரவைத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி செயல்படுவ தாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார்.
மத்திய அரசின் இத்தகைய வஞ்சப்போக்கை எதிர்த்துப் போராடும் திராணி தமிழக அரசிடம் இல்லை என்றும் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசு சிறிதும் கவலைப்படாத போக்கில் செயல் படுவதாகவும் முத்தரசன் மேலும் விமர்சித்துள்ளார்.