பாட்னா: பீகார் மாநிலத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சில மாணவர்களுக்கு மொத்த மதிப் பெண்ணைவிட அதிகமான மதிப் பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்குக் கூட மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதும் மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளி யாகின. ஆனால், இந்தத் தேர்வு முடிவுகளால் பல மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கணிதத் தேர்வில் பீம் குமார் என்ற மாணவருக்கு 35 என்ற மொத்த மதிப்பெண்ணைவிட மூன்று மதிப்பெண் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் 38/35 மதிப்பெண் பெற்று உள்ளார். சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் தேர்விலும் இவருக்கு 35க்கு 37 மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.