புதுச்சேரி: புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி யைப் பொருத்தி போலியாக ஏடிஎம் கார்டு மூலம் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து வருவதாக போலிசில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் உத்தரவின் பேரில் சி.ஐ.டி. காவல்துறையினர் தனிப் படை கள் அமைத்து விசாரித்து வந்தனர். இதில் துப்புத் துலங் கியது. முதலியார் பேட்டையில் உள்ள கணினி சென்டரில் போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்பாக லாஸ் பேட்டை லட்சுமிநகரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30), முதலியார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 5 பேரை ஏற்கெனவே சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த வியாபாரிகளான ரெட்டியார் பாளையம் சிவக்குமார், லாஸ் பேட்டை டேனியல் சுந்தர் சிங் (33) மற்றும் குரும்பாபேட் கணேசன்(33), சோலைநகர் அப்துல் சம்பத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.