நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் முதலிடம்: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

சென்னை: நாட்டிலுள்ள 60 விழுக் காடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதாக அண்மைய ஆய்வின் வழி தெரியவந்துள்ளது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த வாரியத்தின் கண்காணிப்புக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறித்த விவரங்கள் சேகரிக்கப் பட்டன.

பருவமழை தொடங்கும் முன்பே நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர் பான விவரங்கள் தற்போது வெளி யிட்டப்பட்டுள்ளன. இதில் நிலத் தடி நீரை அதிகம் உறிஞ்சும் மாநி லங்களில் தமிழகத்துக்கு அடுத்த படியாக பஞ்சாப், ஆந்திர மாநி லங்கள், 2 மற்றும் 3ஆம் இடங் களைப் பிடித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 80 விழுக்காட்டினர் குடிநீர்த் தேவைக்காக நிலத்தடி நீரையே பயன்படுத்துவதாகக் குறிப்பிடும் நீர்வள நிபுணர்கள், நாடு முழு வதும் வேளாண் பாசனத்துக்கு மூன்றில் 2 பங்கினர் நிலத்திட நீரையே நம்பி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்காக நடையாய் நடக்கும் பெண்கள். படம்: இணையம்

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!