சென்னை: பேரறிவாளன் உள் ளிட்ட 7 பேர் தொடர்பான ஆவ ணங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ளதாக எழுந்த குற்றச் சாட்டின் பேரில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைதாகினர். நீதிமன்றம் அளித்த தண்டனையை அடுத்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பேரறிவாளன் தமது 19ஆவது வயதில் சிறைக்குச் சென்றார். கடந்த 27 ஆண்டு களாக அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் 7 பேரின் உடல்நலம் மற்றும் மனநிலை, குடும்பச் சூழல், சிறைத்தண்டனை மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யு மாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விவரங்களை தமிழக அரசு விரைவில் அளிக்க உள்ளது. எதற்காக மத்திய அரசு இவ்விவரங்களைக் கோரியுள்ளது என்பது தெரியவில்லை.