புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக உதவினால் பாஜகவுக்கு நாங்களும் உதவுவோம். டெல் லிக்கு மாநில அந்தஸ்தை அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வழங்கிவிட்டால் பாஜகவுக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி கூறியுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.
ஆனால் டெல் லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று டெல்லி சட்டப்பேரவையில் மாநில அந் தஸ்து வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடாந்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால் சட்டப்பேரவையில் பேசும் போது, "2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் டெல்லி மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக் கத் தயாராக உள்ளனர்.