புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மூன்றாவது நாளாக புழுதிப் புயலின் காரணமாக காற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமான நிலையை எட்டியிருந்தது. இப் போதைய சூழ்நிலை ஒரு அசௌ கரியமான நிலையை அல்லது மூச்சுவிடுவதற்கு சிரமத்தை ஏற் படுத்தும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். "டெல்லியில் காற்று மாசு மீண் டும் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசி வருகிறது.
"இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்றில் 18 மடங்கு மாசு அதிகரித்துள்ளது. "இந்த மாசு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளி யேற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். "மோசமான தூசிமூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், தொண்டை கரகரப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித் துள்ளனர். "புழுதிப்புயலால் சாலைகளில் பார்வைக் குறைவு ஏற்பட்டு வாக னங்கள் சிரமத்துடன் ஆமை போல் ஊர்ந்து செல்கின்றன. "வானில் போர்வை போல் போர்த்தியுள்ள தூசுமூட்டம் இன் னும் மூன்று, நான்கு நாட்களுக்கு தொடரும்," என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.