இம்பால்: மணிப்பூரில் பருவ மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு மணிப் பூரில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு சுமார் 1.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குக் கடந்த 13ஆம் தேதி முதல் சுமார் 649 மி.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரி வித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்குச் சுமார் 3.2 கோடி ரூபாயை மணிப்பூர் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பெய்த கனமழைக்கு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனத்தின் மீது ஏறி நின்று வெள்ளத்தில் இருந்து மீண்டு செல்ல வழி தேடுகிறார் உள்ளுர்வாசி ஒருவர். படம்: ஏஎஃப்பி