சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குரிய கொள்கை முடிவை தமிழக அரசு விரைவில் எடுக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனவும் அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுக் கொண் டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்க ளுக்கு அதன் நிர்வாகத்திடமிருந்து அரசு இழப்பீடு பெற்றுத்தர வேண் டும் என்றும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமை \யாக இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி யுள்ள அன்புமணி, இது ஆலை மூடல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள சாட் டையடி எனத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடு வதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மிகவும் பலவீனமானது என்பது தமிழக ஆட்சியாளர்க ளுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.
"இப்போதும் காலம் கடந்து விடவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையால் இயற் கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக பட்டிய லிட்டு தமிழகத்தில் தாமிர உருக் காலைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றலாம். "அதனடிப்படையில் புதிய மூடல் ஆணையைப் பிறப்பிக்க லாம். அதுதான் சட்டப்படி செல்லத்தக்க நடவடிக்கையாக இருக்கும்" என அன்புமணி அறிவுறுத்தி உள்ளார்.