சென்னை: விளைநிலங்களில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் மிகுந்த சேதமடைந்து இருப்பதாக வும், அவை எப்போது வேண்டு மானாலும் உடைந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தமிழக விவசாயிகள் கவலை தெரிவித் துள்ளனர். மின்கம்பங்கள் உடைந்து விழுவதால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் மின்கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில் இந்த மின்கம்பங்க ளில் உள்ள சிமெண்ட் பூச்சு முழுவதும் உடைந்து உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
தற்போது பருவ மழைக்காலம் தொடங்கி இருப்பதால் விவசாயப் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், விவசாயப் பணிகளில் ஈடுபடும் போது சேதமடைந்த மின் கம்பங் கள் உடைந்து விழுமோ எனும் அச்சம் நிலவுகிறது. எனவே, அச்சுறுத்தும் வகையில் சேதம டைந்துள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டுத் தரமான மின் கம்பங்கள் அமைக்கப்பட வேண்டு மென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.