புதுடெல்லி: மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படுவ தாக முதல்வர் பழனிசாமி தெரி வித்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும் மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்றவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். தமிழக வளர்ச்சித் திட்டங் களுக்குத் தேவையான நிதியைப் பங்கிடுவதில் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் மாநிலங்களைப் பாதிக்காத வகையில் 15வது நிதிக்குழு விதிகளில் திருத்தங் களைச் செய்யவேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
முதல்வர் பழனிசாமி. படம்: ஊடகம்