தூத்துக்குடி: காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து வீண் வதந்திகளைப் பரப்பி வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா எச்சரித்துள்ளார். தூத்துக்குடியில் பெண்கள், குழந்தைகள் யாரும் துன்புறுத்தப் படவில்லை என அவர் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவை இல்லை என்றும் கூறினார். "யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்யவில்லை. இதுவரை 248 பேர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இதில் 186 பேர் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளனர். "காவல்துறையினரால் பெண் கள், குழந்தைகள் துன்புறுத்தப் படுகின்றனர், கைது செய்யப்படு கின்றனர் என சமூக வலைத் தளங்களில் பொய்யான தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால், மக்கள் மிகுந்த அச்சத் திலும் பதற்றத்திலும் உள்ளனர்," என்றார் முரளி ரம்பா.