மோடி: இந்தியாவின் இலக்கு US$5 டிரில்லியன் பொருளியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூடியவிரைவில் US$5 டிரில்லி யன் பொருளியலைச் சாதிப்பதே இந்தியாவின் இலக்கு என்று தெரிவித்து இருக்கிறார். இந்த இலக்கைச் சாதிக்க வேண்டும் என்றால் இரட்டை இலக்க பொருளியல் வளர்ச்சியை எட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

புதுடெல்லியில் இந்திய மாற் றத்திற்கான தேசிய ஆணையத் தின் (நிதி ஆயோக்) நான்காவது ஆட்சி மன்றக் கூட்டத்தில் உரை யாற்றிய பிரதமர் மோடி, இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளியலைக் கொண்ட நாடாக விரைவில் ஆகும் என உலகம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். முதல்வர்களிடையே பேசிய பிரதமர், 2017=18ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் இந்தியப் பொருளியல் 7.7% வளர்ந்தது என்றும் இந்த வளர்ச்சி விகி தத்தை ஈரிலக்கமாக மாற்றுவதே அரசின் சவால் என்றும் கூறினார்.

இதற்குத் தேவையான பல் வேறு நடவடிக்கைகளையும் தமது அரசு எடுக்கும் என்றும் 2020க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த நட வடிக்கைகள் மிகவும் அவசியம் என்றும் பொருளியல் இலக்குகள் நிறைவேற யோசனைகள், கருத்து களை முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!