சென்னை: தூத்துக்குடி கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராகக் கடந்த மாதம் வரை தூத்துக்குடியில் தொடர் போராட் டம் நடைபெற்றது. 100வது நாளாக நடைபெற்ற போராட்டத் தின்போது வன்முறை வெடித்து, கலவரத்தில் முடிந்தது.
இதையடுத்துக் காவல்துறையி னர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். ஏராள மானோர் படுகாயமடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் கடும் கண் டனம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக சிபிசிஐடி போலி சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையி லான ஒரு நபர் விசாரணை ஆணையமும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கிறது. இந்நிலையில் கலவரம், துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியு றுத்திய நிலையில், இதே கோரிக்கையுடன் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் மக்கள் அரசு கட்சித் தலைவர் ரஜினிகாந்த் என்பவரும் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம். படம்: தமிழக தகவல் ஊடகம்