அமைச்சருடன் 'செல்ஃபி' எடுத்த சேகர் சென்னை: திரைப்பட நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகரைக் காவல்துறை தேடிவருவ தாகக் கூறப்படும் நிலையில், அவர் அமைச்சர் கடம்பூர் ராஜு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் செய்தியாளர்கள் குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்ட தாக எஸ்.வி. சேகர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது மத்திய குற்றப் பிரிவு போலி சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சேகரைப் போலி சார் கைது செய்வர் என எதிர்பார்க் கப்பட்டது. முன்பிணை பெறுவதற் காக அவர் மேற்கொண்ட முயற்சி கள் பலனளிக்கவில்லை. சேகரைக் கைது செய்யாதது குறித்து அமைச்சர்களிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம், சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்பதே பதிலாக இருந்தது.
அமைச்சருடன் எஸ்.வி. சேகர். படம்: தமிழக தகவல் ஊடகம்