சென்னை: விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வரும் நிலையில் சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரி சீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுராந்தகம் அருகே புதிய விமான நிலையத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விளங்குகிறது. எனினும் பயணிகளின் எண்ணிக்கை அதி கரித்த நிலையில், இங்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர இயலவில்லை.
இடநெருக்கடி காரணமாக விமான நிலையத்தை விரிவுபடுத் தும் பணியையும் மேற்கொள்ள இயலவில்லை. இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை உள்நாட்டு விமானப் போக்குவரத் துக்காக ஒதுக்கிவிட்டு, புதிய அனைத்துலக விமான நிலையம் அமைப்பதே சிறந்த ஏற்பாடாக இருக்கும் எனும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அம்முயற்சி கைவிடப்பட்டது.