சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவிற்கு அரசாங்கச் செலவில் மெரினாவில் நினைவிடம் கட்டக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதி முறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக் கட்டடமும் கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் தங்களது மனுவில் கூறி யிருந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, "உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக விளங்குவது மெரினா கடற்கரை. "இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந் தியாவிற்கே பெருமையான ஒன்று. சாலையில் செல்லும் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி கடற்கரையின் அழகைக் கண்டு ரசிக்க வேண்டும். "சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உள்பட எந்தவொரு கட்டடமும் கட்டப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப் பம். "இருப்பினும் இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களின் அடிப்படையில்தான் இறுதி முடிவுக்கு வரமுடியும்," என்று கூறினார். அடுத்தகட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது.