உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடும் ஆர்வத்தில் இருக்கும் கமல்ஹாசன் தமது மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணை யத்திடம் நேற்று முறைப்படி பதிவு செய்தார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் கமல் தமது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்தார். அதன் பின் தமது கட்சிக்கு அங்கீகாரம் கோரி டெல்லி தலைமைத் தேர் தல் ஆணையத்திடம் அவர் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்துக்கு ஆட் சேபம் தெரிவிப்பவர்கள் முன்வர லாம் என அறிவித்த தேர்தல் ஆணையம் அதற்காகக் கால அவகாசம் வழங்கியது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எதிராக இதுவரை எந்தவொரு ஆட்சேபணையும் வராததால் கட்சியைப் பதிவு செய்யுமாறு கமலுக்கு ஆணையம் அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து கமலும் அவரது கட்சியின் தலைமை நிர் வாகிகளும் டெல்லிக்கு விரைந் தனர். நேராக தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்ற அவர்கள் அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவு நடைமுறைகளை மேற்கொண்ட னர். ஆணைய அலுவலகத்திற்கு வெளியே வந்த கமல் செய்தி யாளர்களிடம் பேசினார்.
"எங்களது ‚கட்சி குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விளக்கம் அளித்தோம். அங்கீகாரத்துக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துள் ளோம். கூடிய விரைவில், பதிவு செய்யப்பட்டதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்," என்றார்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து வெளியேறி வந்த கமல்ஹாசனும் கட்சியின் தலைமை நிர்வாகிகளும். படம்: இந்திய ஊடகம்