சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் நள்ளி ரவில் விபத்துக்குள்ளானதை அடுத்து சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்தபோது துருவ் தான் காரை ஓட்டிச்சென்றதாகவும் அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை போலிசார் அவரைக் கைது செய் துள்ளனர். எனினும் அவர் பின் னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் துருவ் நண்பர்கள் சிலருடன் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விருந்து முடிந்த பின் நண்பர்கள் இருவருடன் அவர் வீடு திரும்பி உள்ளார். தேனாம்பேட்டை பகுதி அருகே வந்தபோது திடீரென கட்டுப் பாட்டை இழந்த அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சாலையோரம் நின்றிருந்த 3 ஆட்டோக்கள் மீது அந்தக் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 3 ஆட்டோக் களும் கடும் சேதமடைந்தன. அதேபோல் காரின் முன்பகுதி, பின் பகுதி இரண்டுமே சேதமடைந் துள்ளன. ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த போலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற் கொண்டனர். இதையடுத்து துருவ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.