விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சுதந்திர நாளையொட்டி சென்னை விமான நிலை யத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 72ஆவது சுதந்திர நாள் விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையம் தற்போது அதி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. விமான நிலையத்தி லும், அதைச் சுற்றியுள்ள பகுதி களிலும் போலிசாரின் கண் காணிப்பு தீவிரமடைந்துள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் போலிசாரின் கண்காணிப்பு வளை யத்துக்குள் கொண்டு வரப்பட் டுள்ளன. மேலும் நள்ளிரவில் வாகன சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. சந்தேகத்துடன் காணப்படுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!