சிம்லா: இமாலச்சலபிரதேசம், உத்தரகாண்ட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநில மெங்கும் வெள்ளக்காடாக காட்சி யளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத் தில் மட்டும் மழை, நிலச்சரிவில் புதையுண்டு ஒன்பது பேர் உயி ரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள் ளது. "இம்மாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் அவதிப் பட்டு வருகின்றனர். மின் இணைப் பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா நெடுஞ்சாலையையும் நிலச்சரிவு மூடியுள்ளது," என்று அதிகாரிகள் கூறினர். மாண்டி மாவட்ட நிலச்சரிவு சம்பவங்களில் மூவர் உயிரிழந்த னர். சோலான் மாவட்டத்தில் உள்ள கௌசல்யா ஆற்றின் வெள்ளப் பெருக்கில் ஒரு சிறுவன் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படு கிறது.
இமாச்சலப்பிரதேச மாநிலம், சோலான் மாவட்டத்தில் உள்ள காந்தாகாட்டின் சால்க்கா கிராமப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிருடன் புதையுண்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப் பட்டது. மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
வட இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஓடும் டாவி ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு மரத்தை சமையலின்போது அடுப்பு எரிப்பதற் காகப் பயன்படுத்த குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். தொடர்ந்து இங்கு கனமழை பெய்து வருகிறது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. படம்: இபிஏ