சென்னை: விரைவில் நடைபெற உள்ள இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்று, தமிழக அரசியல களத்தில் அது முதன்மைக் கட்சி என்பதை நிரூபிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பேசுவது எல்லாம் நடப்பு ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப் பிருப்பதாக ஜெய் ஆனந்த் தெரிவித் துள்ளார். மேலும், டிடிவி தினகரன் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஏழரைச் சனி ஒழிந்துவிட்டது என்று ஜெய் ஆனந்த் கூறி இருப்பது சலச லப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரனை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துச் செய்தியாளர் கள் தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது, ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி என்றும், அவரைப் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப் பிட்டார்.