கோவை: கனமழை நீடித்து வருவதையடுத்து பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பள்ளிக ளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனைமலை பகுதியிலும் நேற்று பள்ளிகள் மூடப்பட்டன. கோவை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சியில் தாழ்வான பகுதி களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந் தனர். தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. பரம் பிக்குளம் அணை நிரம்பியுள்ளது. இந்த அணை முழு கொள்ளளவான 72 அடியை எட்டியது.
மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டி யுள்ளது. இதன் மொத்த கொள்ள ளவு நூறு அடியாகும். வால்பாறை யில் இரு தினங்களாக மழை வெளுத்துக் கட்டுகிறது. அங்கு நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக நீலகிரி மாவட் டத்திலும் மழை நீடிக்கிறது. ஊட்டி யில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்தது. நீலகிரி, கோவை மாவட் டங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் வராமல் தங்கு விடுதி அறைகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ஊட் டியில் சுற்றுலா பயணிகள் அதிக மாகக் குவியும் சுற்றுலா பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.