புதுடெல்லி: தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட 11 எம்எல் ஏக்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் ஆலோ சனைக் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது.
இந்தக் கூட்டத் தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் மாநில தலைமைச் செய லாளர் அன்ஷூ பிரகாஷ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் தலை மைச் செயலாளர் அன்ஷூ பிர காஷை தாக்கியதாகக் கூறப்படு கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் லைன் போலிசில் தலை மைச் செயலாளர் புகார் செய்தார். அதன்பேரில் எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.