சென்னை: தூத்துக்குடி துப் பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களத் திலும் பொதுவெளியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்து வந்த பல்வேறு தரப்பி னரும் நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் பல் வேறு போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த னர். அதன் உச்சக்கட்டமாக மே 22ஆம் தேதி ஆயிரக்கணக் கானோர் பேரணியாகச் சென்ற னர்.
அப்போது போலிசார் துப் பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதற்கு அர சியல் கட்சிகள், பொது அமைப்பு கள் எனப் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமி ழக அரசு. ஆனால் சிபிஐ விசா ரணை நடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.