சென்னை: பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பட்சத்தில், நீதி மன்ற உத்தரவு வரும் வரை நிலத்தின் உரிமையாளரை வெளி யேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சென்னை - சேலம் இடையே 8 தடப்பசுமை வழிச் சாலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5 மாவட் டங்களில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின் றன. இதையடுத்து இத்திட்டத் துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குறிப்பாக தங்களது விளை நிலங்கள் பறிபோவதாக விவசாயி கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் நிலத்தைக் கையகப் படுத்துவதைத் தடுக்கக் கோரியும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றபோதே மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்த னர். நேற்று முன்தினம் நடந்த இருதரப்பு வாதங்களின்போது பசுமை வழிச் சாலைத் திட்டத்துக் காக நில உரிமையாளரை வலுக் கட்டாயமாக வெளியேற்றும் எண் ணம் அரசுக்கு இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விவரம் தெரிவிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக் கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட் டார். இதையடுத்து அந்தத் துண் டுப் பிரசுரத்தைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், அதில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் விதமாக எந்தவித விளக்கமும் இடம்பெற வில்லை எனச் சுட்டிக் காட்டினர்.