பெண் எம்பியிடம் கைபேசியில் ஆபாசப் பேச்சு

நெல்லை: அதிமுகவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கைபேசி மூலம் ஆபாசமாகப் பேசிய நபருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது. சென்னைப் புறநகர்ப் பகுதி யைச் சேர்ந்த அந்தப் பெண் எம்பி யின் கைபேசிக்கு அண்மையில் ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆடவர் தன்னை நெல்லையைச் சேர்ந்த முக்கியப் புள்ளி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்துப் பாலியல் ரீதி யில் அவர் ஆபாசமாகப் பேச, பெண் எம்பி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தன் உதவியாளரிடம் விவரம் தெரிவிக்க, அந்த ஆடவர் குறிப்பிட்ட நெல்லையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. தமக்கும் அந்தத் தொலைபேசி அழைப்புக்கும் எந்தவிதத் தொடர் பும் இல்லை என அந்தப் பிரமுகர் தெளிவுபடுத்தி உள்ளார். இதைய டுத்துத் கைபேசியில் பதிவான எண்ணை பெண் எம்பியின் உதவியாளர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது அந்த நபர் மிரட்டும் தொனியில் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து மர்ம நபர் குறிப் பிட்ட அந்த முக்கியப் பிரமுகர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் பாளையங்கோட்டை பகுதி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!