சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட் சியில் ஊழல் மலிந்துவிட்டதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், முதல்வருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது அக்கட்சி. நெடுஞ்சாலைத் துறையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக திமுக புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ரூ. 3,120 கோடி அளவுக்கு நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், அதன் பேரில் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.