திமுகவில் திருப்பம்; கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அமித் ஷா

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் மு.க. அழகிரி, சென்னையில் அமைதிப் பேரணியை நடத்தி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்கப் போவதாக சூளுரைத்திருந்தார். இந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான நடவடிக்கையில் அதிரடி வியூகம் வகுக்க முன்னாள் மத்திய அமைச் சருமான அழகிரி நேற்று தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த 16வது நாள் நிகழ்ச்சிகள் சென்னையில் கோபாலபுரம் வீட்டில் நடந்தன.

அதில் பங்கேற்ற அழகிரி பின்னர் மதுரைக்குத் திரும்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அழகிரி, "என் மனக்குமுறலை எப்போது கூற வேண்டும் என அப்பா கூறு கிறாரோ, அப்போது மக்களிடம் கூறுவேன். என் மனக்குமுறல் நேரம் வரும்போது வெளிப்படும்," என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு மற்றொரு நிகழ்ச் சியில் பேசிய மு.க.அழகிரி, "திமுகவிலிருந்து என்னை வெளி யேற்றிவிட்டனர். நானாக கட்சியி லிருந்து வெளியேறவில்லை," என்றார்.

இந்நிலையில் நேற்று காலை மதுரையில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட் டார். அதில் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடக்கும் அமைதிப் பேரணியில் பலத்தைக் காட்டுவது குறித்தும் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவது குறித்தும் ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.

மற்றொரு நிலவரத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கனிமொழி தலைமையில் நடந்த மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!