திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வை யிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதற்கட்ட மாக எட்டு நாட்களும் இரண்டாம் கட்டமாக 12 நாட்களும் தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்ட தால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன. ஒன்பது மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணி 4 நாட்களில் நிறைவடையும்," என்றார். "முக்கொம்பில் உடைந்த அணைக்குப் பதில் ரூ.325 கோடி மதிப்பில் புதிதாக கதவணை கட்டப்படும். இதேபோல் கொள் ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்கப்படும். இந்தக் கதவணைகளை 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது," என்றும் அவர் சொன்னார்.
கொள்ளிடம் மேலணையில் ஏற்கெனவே ஒன்பது மதகுகள் உடைந்துள்ள நிலையில் மேலும் சில மதகுகள் உடையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கோப்புப் படம்: இந்திய ஊடகம்