காவிரியில் வெள்ள அபாயம்

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக் கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்தததால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து தமிழகத் தின் மேட்டூர் அணையும் நிரம்பி யது. எனவே அணையின் பாது காப்புக் கருதி 25 நாட்களுக்கும் மேலாக அதிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

மழையின் தீவிரம் குறைந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண் ணீர் வெகுவாகக் குறைக்கப்பட்ட தால் கடந்த மூன்று நாட்களாக காவிரியில் வெள்ளம் வடிந்து காணப்பட் டது. இந்தச் சூழ்நிலையில் கர்நாடகா வின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிக ளில் மீண்டும் மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கபினி, கேஆர்எஸ் அணைகளில் நேற்று 32 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட் டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!