மதுரை: தமிழர்களின் கலாச் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகை யில் மதுரையில் நடைபெற்ற திரு மண நிகழ்வு பலரையும் வெகு வாகக் கவர்ந்தது. வில்லாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான விஜயகுமார், காயத்ரி திருமணம் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து மணமக்கள் திரு மண மண்டபத்துக்குக் கிளம்பி னர். அப்போது இருவரும் காளை களைப் பூட்டிய மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது அனைவரை யும் கவனிக்க வைத்தது.
மாட்டு வண்டியை விஜயகுமார் ஓட்ட அருகில் அமர்ந்திருந்தார் மணப்பெண் காயத்ரி. வண்டியின் முன்னே பெண்கள் கிராமிய மணம் கமழ கண்டாங்கி சேலை கட்டி வரிசையாக வந்தனர். மேலும் பொய்க்கால் குதிரை, ஒயி லாட்டம் என ஊர்வலத்தின் முன் கிராமியக் கலைஞர்களும் அடுத்தடுத்து நடனமாடியபடி வந்தனர். "நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை வாழ வேண் டும். விவசாயத்தை போற்றிக் காக்க வேண்டும். நம் கலாச்சாரம், பண்பாடு உயர்ந்தது. அதனை காலந்தோறும் போற்றி பாதுகாக்க வேண்டும். இதை உணர்த்தும் வகையிலேயே எங்கள் திருமணம் நடைபெற்றது," என்றார் மணமகன் விஜயகுமார்.