புதுடெல்லி: தமிழ் உலகின் மிகவும் தொன்மையான மொழி என்று தனது 47வது வானொலி உரை யில் கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. வரும் பண்டிகை நாட்களுக்காக மக்களுக்கு வாழ்த்து கூறிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரள மக்களுக்கு நாடு தோளோடு தோள் கொடுத்து உதவும் எனவும் சொன்னார். "கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு இந்தப் பருவ மழை எதிர்பார்ப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சில வேளைகள் மிகையான மழையும் கூட நாசமேற்படுத்தும் வெள்ளப் பெருக்கை உண்டாக்கி விடுகிறது.
"பேரழிவை ஏற்படுத்திய வெள் ளத்தால் கேரள மக்களின் வாழ்க்கை மோசமான அளவுக்குப் பாதிக்கப்பட்டது. இந்தக் கடினமான சூழ்நிலையில் நாடு முழுவதும் கேரளாவிற்கு துணையாக நிற்கிறது," என்றார். மேலும் பேசிய அவர், "ஒவ் வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனை வருக்கும் பெருமிதம் உள்ளது," என்றார்.
"நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு ஈடு செய்ய முடியாதது. "மக்களவையில் 21 மசோதாக் களும் மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப் பட்டன. தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட் டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. "12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைப் பாலியல் வன் கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது," என்று பேசினார்.