கூட்டணி ஆட்சி கவிழாது என குமாரசாமி நம்பிக்கை

பெங்களூரூ: கர்நாடகத்தில் பாஜக எதிர்பார்ப்பது போல காங்கிரஸ்= மஜத கூட்டணி அரசு கவிழாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரசைச் சேர்ந்த வருமான சித்தராமையா, நேற்று முன்தினம் தான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று கூறியது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட் டணி ஆட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, தான் பேசியது அடுத்த தேர்தல் பற்றித் தான் என்று விளக்கமளித்துள்ளார் சித்தராமையா.

இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை தனியார் மாணவர் விடுதியைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் குமாரசாமி. அப்போது, "காங்கிரஸ்=மஜத கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக பகல் கனவு காண்கிறது. கூட்டணி அரசு ஒருபோதும் கவிழாது. "நான் எத்தனை நாள்களுக்கு முதல்வராக நீடிக்க வேண்டுமென் பதைக் கடவுள்தான் தீர்மானிப்பார். முதல்வர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள நான் எந்த முயற்சியையும் மேற்கொள்ளப் போவதில்லை. "எனது தலைமையிலான கூட் டணி அரசைக் கவிழ்க்க ஒரு சிலர் சதி செய்து வருவது எனக் கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. "செப்டம்பர் 3ல் கர்நாடகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பார் என்ற செய்தியை ஊடகங்களில் கவனித்தேன். இதற்காக நான் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளப்போவதில்லை. பதவி வகிக்கும் காலத்தில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!