சிங்கப்பூர் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து

இந்தியாவின் குடியரசு தின விழாவின் தொடர்பில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் பிர தமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திருவாட்டி ஹலிமா, இந்திய அதிபர் ராம் நாத் கோவிந்துக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் சிங்கப்பூரும் இந்தியாவும் ஆழ மான வரலாற்றுப்பூர்வ உறவைக் கொண்டிருப்பதாகவும் இரு நாடு களுக்கு இடையிலான இந்த சிறப்பான உறவு வரும் ஆண்டு களில் வலுமிக்கதாக ஆகும் என்ற நம்பிக்கைத் தமக்கு இருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு லீ அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி யில் கடந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் ஒன்பது ஆசியான் தலைவர்களுடன் இணைந்து தாமும் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்துள் ளார். இந்தியாவுக்குத் தமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் லீ, உள்நாட்டிலும் அனைத் துலக அரங்கிலும் இந்தியா பெரும் சாதனைகள் புரிந்துள்ள தாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூருக்கும் இந்தியா வுக்கும் இடையிலான நீண்டகால தோழமை ஒவ்வோர் ஆண்டும் விரிவடையும் என்றும் திரு லீ தெரிவித்துள்ளார். மேலும் திரு மோடி கடந்த ஆண்டு இருமுறை மேற்கொண்ட சிங்கப்பூர் பயணத்தின்விளைவாக உத்திபூர்வ பங்காளித்துவத்துக்கு வலுவான எழுச்சி ஏற்பட்டதாக வும் அவர் கூறியுள்ளார்.