இந்தியாவின் வரவு செலவு திட்டம்: விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைக்கலாம்

இந்தியாவின் இவ்வாண்டுக்கான வரவு செலவுதிட்டத்தில் விவசாயிகளுக்கான சலுகைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தல் நடைபெற சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசாங்கம் நடுத்தர வகுப்பினருக்கு வரி குறைப்பு அறிவிக்கலாம் என்று அந்நாட்டின் அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

விவசாய வருவாயில் தேக்க நிலை, அரசாங்கத்தின் வேலை வாய்ப்புக் கொள்கை மீதான சந்தேகம் ஆகியவற்றை பாரதிய ஜனதா அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குப் பதிலாகத் தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயால் வரவு செலவு திட்ட உரையை இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றுவார். இந்தச் செலவினத் திட்டம் தற்காலிகமானது என்றும் ஜூலையில் மற்றொரு முழுமையான திட்டம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.