விழுந்து நொறுங்கிய போர்விமானம்; விமானிகள் மரணம்

இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த ‘மிராஜ் 2000’ போர்விமானம், பெங்களூருவிலுள்ள ‘ஹிந்துஸ்தான் ஏரொனோட்டிக்ஸ்’ விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்திற்குள் இருந்த இரு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீர் அப்ரோல், சித்தார்த் நேகி ஆகியோர் மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலே மாண்டதாகவும் மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று இந்திய ஆகாயப்படை கூறியது. விமானம் விழுந்த இடத்திலிருந்து கரும்புகை வானளவு உயர்ந்ததைக் காட்டும் படங்களும் காணொளிகளும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்