மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியாக தாராவி உள்ளது. இது குட்டித் தமிழகம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. தாராவியைக் குடிசையில்லாப் பகுதியாக மாற்ற கடந்த 15 ஆண்டுகளாக மாநில அரசு பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வரை தாராவியை முழுமையாக சீரமைக்க முடியவில்லை. இந் நிலையில் தாராவியைச் சீரமைக்கும் பணியைச் செய்ய மாநில செயலாளர்கள் அடங்கிய உயர்மட்ட குழு 'சீலிங்க் டெக்னா லஜி கார்ப்பரேஷன்' நிறுவனத்தைத் தேர்வு செய்து உள்ளது. இந்த நிறுவனம் நிலாங் ஷா, ராஜேஸ் ராமசந்திரன், ஜிக்னேஷ் சாங்வி, ஹீத்தன் ஷா ஆகிய 4 தனி நபர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் இந்தியர் இருவரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருவரும் ஆவர். இவர்கள் நால்வரும்தான் தாராவி சீரமைப்புத் திட்டத்தைச் செயல் படுத்த உள்ளனர். மேலும் 'சீலிங்க் டெக்னாலஜி கார்ப்பரேஷன்' நிறுவனம் ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தினரின் நிதி உதவியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அபுதாபியில் உள்ள அரச குடும்பத்தினர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள்தான் இத் திட்டத்திற்கான நிதியை வழங்குகின்றனர்," என் றார். தாராவி சீரமைப்புத் திட்டத் திற்காக ரூ.28,500 கோடி செல விடப்பட உள்ளது. இதற்காக பூமி பூசை அடுத்த மாதம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை தாராவி ரூ.29,000 கோடியில் சீரமைப்பு
1 mins read

